valipane sirushtikarai ninai -2

வாலிபனே சிருஷ்டிகரை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வாலிபனே சிருஷ்டிகரை நினை -2
தீங்கு நாள் வராததற்கு முன்னும்
பிரியம் அல்ல என்று நீ சொல்லும் முன்னும்
சூரியனும் சந்திரனும்
இருளடையும் முன்னும்
பலகணியாம் கண்கள் இரண்டும்
இருளடையும் முன்னும் – வாலிபனே
மேட்டுக்காய் அச்சம் உண்டாகும் முன்னும்
வழியிலே பயங்கள் தோன்றும் முன்னும்
வெட்டுகிளியும் பாரமாகி
வாதுமை மரம் பூ பூக்கும் முன்னும் – வாலிபனே
ஏந்திரம் அரைப்போர் கொஞ்சமாகும் முன்னும்
பெலசாலி கூனிபோகும் முன்னும்
வாசலின் கதவுகள் அடைப்பட்டு
கீத வாத்தியம் அடங்கி போகும் முன்னும் – வாலிபனே
வெள்ளி கயிறு கட்டுவிடும் முன்னும்
பொற்கிண்ணி நசுங்கி போகும் முன்னும்
ஊற்றண்டை சால் உடைந்து
துரவண்டை உருளை நொறுங்கும் முன்னும் – வாலிபனே