valladevan

வல்ல தேவன் என்னோடிருப்பாரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வல்ல தேவன் என்னோடிருப்பாரே
வழுவாதென்னை காத்திடுவாரே
அல்லேலூயா என்றார்ப்பரிப்பேனே
அல்லேலூயா என்றார்ப்பரிப்பேன்
பயப்படாதே என்று உரைத்தாரே
பாரின் எந்தனை மீட்டெடுத்தாரே
பேரைச்சொல்லி அழைத்திட்டாரே
பேரானந்தம் நான் சொந்தமானேன்
தண்ணீர்களை கடந்திடும் போதும்
தயங்காதே உன்னோடு இருப்பேன்
அக்கினியில் நடக்கும் போதும்
அதுன் பேரில் பற்றாதே என்றார்
இமைப்பொழுது என்னை கைவிட்டாலும்
இரக்கங்களால் சேர்த்துக் கொள்வாரே
நித்திய கிருபையுடன் இரங்கி
நித்தம் என்னை நடத்துவாரே
உறுதியாய் உம்மைப் பற்றிக் கொண்டால்
உண்மையாய் என்னைக் காக்துக் கொள்வீரே
கெஞ்சும் வேண்டுதல்கள் கேட்பீரே
தஞ்சம் வேறொருவருமில்லை
அறிவாரே நான் போகும் வழியை
அறிந்தென்னை சோதித்திடுவாரே
புடமிட்டு சுத்தம் செய்வாரே
பின்பு சுத்த பொன்னாய் மாறுவேன்
வருவேன் என்ற வாக்குப்படியே
வருவீரே என் யேசு மணாளா
அசைவில்லா அந்நாட்டை சேர
ஆவலாக காத்திருப்பேனே - வல்ல