vanam unthan singkasanam

வானம் உந்தன் சிங்காசனம்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வானம் உந்தன் சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி (ஏசாயா 66:1, அப்போ 7:49)
இத்தனை பெரிய தேவனுக்கு முன்
பயத்தோடு பக்தியோடு ஆராதிப்பேன்
பரிசுத்த அலங்கார துதிகளுடனே
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
1. வீணான சத்தம் போடாமல்
உலகத்தின் வேஷம் தரியாமல்
கூத்தாட்டம் களியாட்டம் செய்யாமல்
நீர் விரும்பும் ஆராதனை செய்திடுவேன்
2. ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன்
வேதம் சொல்லும் ஆராதனை செய்திடுவேன்
எழுப்புதல் ஏக்கத்தின் ஜெபத்தோடு
நீர் விரும்பும் ஆராதனை செய்திடுவேன்
தேசங்கள் இயேசுவை அறிந்திட
நீர் விரும்பும் ஆராதனை செய்திடுவேன்
3. திரியேக தேவன் வந்திருக்க
தூதர் சேனை ஏகமாய் சூழ்ந்திருக்க
மகிமையின் மேகம் இறங்கியிருக்க
நீர் விரும்பும் ஆராதனை செய்திடுவேன்
அளவில்லா பிரசன்னம் இறங்கியிருக்க
நீர் விரும்பும் ஆராதனை செய்திடுவேன்
4. அறுவடை மிகுதியாய் இருக்குதே
யார் போவார் என்ற சத்தம் கேட்குதே
ஊழிய அழைப்புக்கு அர்ப்பணித்து
நீர் விரும்பும் ஆராதனை செய்திடுவேன்
மிஷனெரி சேவைக்கு அர்ப்பணித்து
நீர் விரும்பும் ஆராதனை செய்திடுவேன்
5. மனிதனை பிரியப்படுத்தாமல்
சாத்தான் சொல்வதை செய்யாமல்
பாவத்தை முற்றிலும் களைந்துவிட்டு
நீர் விரும்பும் ஆராதனை செய்திடுவேன்
6. சாத்தானின் சேனை ஒழிந்திடவே
பேய்கள் பிசாசுகள் ஓடிடவே
தீராத நோய்கள் மறைந்திடவே
நீர் விரும்பும் ஆராதனை செய்திடுவேன்
7. சிங்காசனம் சுற்றி வருகின்றேன்
பரிசுத்தர் என்று முழங்கிடுவேன்
முற்றிலும் தாழ்த்தி அர்ப்பணித்து
நீர் விரும்பும் ஆராதனை செய்திடுவேன்
8. இரட்சிப்பின் வஸ்திரம் உடுத்திக்கொண்டு
பரிசுத்த வேதத்தை பிடித்துக்கொண்டு
இயேசுவின் சிலுவையை உயர்த்திக்கொண்டு
நீர் விரும்பும் ஆராதனை செய்திடுவேன்
9. கறை திறை அற்ற சபையாக
சரியான உபதேசத்தில் நடந்திடவே
பரிசுத்த மணவாட்டியாய் காத்திருந்து
நீர் விரும்பும் ஆராதனை செய்திடுவேன்
10. அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
மாரநாதா மாரநாதா மாரநாதா
நீர் விரும்பும் ஆராதனை செய்திடுவேன்
ஏசாயா 66:1 அப்போ 7:49 ஆம் வசனங்களிலே
வானம் அவருடைய சிங்காசனம்
பூமி அவருடைய பாதபடி
இத்தனை பெரிய தேவனுக்கு முன்பதாக
பயத்தோடு பக்தியோடு ஆராதிப்போம்
பரிசுத்த அலங்காரத்துடனே அவரை தொழுதுகொள்ளுவொம்
நாம் விரும்புகிற ஆராதனை அல்ல
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விரும்புகிற
ஆராதனை செய்வோமா? ஆமேன்