vananthiramay varantuthan pookaiyil

வனாந்திரமாய் வறண்டுதான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வனாந்திரமாய் வறண்டுதான் போகையில்
அங்கும் இங்கும் அலைந்து நான் நிற்கையில் -2
பயப்படேன் நான் திகைத்திடேன் நான்
நீர் என் தேவன் என்னை நடத்திடுவீர் -2
வியாதியோ? கவலையோ? குழப்பமோ?
சோர்வுகளோ?மனதின் ஏக்கமோ?-2
எண்ணி முடியா பெரிய காரியம்
செய்திடுவார் திடன்கொள் மனமே -2
கண்ணீர் தான் உந்தன் வாழ்க்கையோ (படுக்கையோ)
துடைத்திடுவார் கலங்காதே மகனே (மகளே ) -2
காத்திடு நீ கர்த்தருக்காய்
புதுபெலன் அடைந்து நீயும் எழும்பிடுவாய் -2
“ஜெயமெடுத்தவர் நீர்
அப்பாதையில் நடத்துவீர்
நான் தோற்றுப் போவதில்லை”
” என் அசையா நங்கூரமே
என் அசையா நம்பிக்கையே
உம் சார்பில் விழுந்தேனையா “