Vanathil Velli Thearil

வானத்தில் வெள்ளி தேரில்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

(வானத்தில் வெள்ளி தேரில் உறங்கும் தேவனின் பொன்முத்தே
வானத்தை விட்டிங்கு உம்முத்தம் தந்திட கீழே நோக்கிடுவீரோ?
நீர் கீழே நோக்கிடுவீரோ?) x 2
1. (அம்மாவின் நெஞ்சிலே வெப்பம் பெற்றிட வந்தவரல்லோ நீர்?
மண்ணில் சுந்தர சொப்பனங்கள் கொண்ட ஓர் வீடு தந்தவரல்லோ நீர்?) x 2
வீடு தந்தவரல்லோ நீர்?
வானத்தில் வெள்ளி தேரில் உறங்கும் தேவனின் பொன்முத்தே
வானத்தை விட்டிங்கு உம்முத்தம் தந்திட கீழே நோக்கிடுவீரோ?
நீர் கீழே நோக்கிடுவீரோ?
2. (சொர்க்க சிம்மாசனம் தன்னில் அமர்ந்துள்ள நேசரை பார்க்கலையோ?
விண்ணில் தேவதூதர் கூட்டம் கூட சேர்ந்தங்கு பாடி துதிப்பீரோ?) x 2
நீர் பாடி துதிப்பீரோ?
வானத்தில் வெள்ளி தேரில் உறங்கும் தேவனின் பொன்முத்தே
வானத்தை விட்டிங்கு உம்முத்தம் தந்திட கீழே நோக்கிடுவீரோ?
நீர் கீழே நோக்கிடுவீரோ?
3. (முத்துக்கள் கொண்டு கட்டிடயதோர் வீடு சொர்க்கத்தில் உள்ளதல்லோ?
அங்கே அன்னை மரியும் யோசேப்பும் இன்று கூட இருப்பாரல்லோ?) x 2
உம் கூட இருப்பாரல்லோ?
வானத்தில் வெள்ளி தேரில் உறங்கும் தேவனின் பொன்முத்தே
வானத்தை விட்டிங்கு உம்முத்தம் தந்திட கீழே நோக்கிடுவீரோ?
நீர் கீழே நோக்கிடுவீரோ?