1.vanum puviyum vaiyakamum

வானும் புவியும் வையகமும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.வானும் புவியும் வையகமும்
வனைந்த வல்ல பரனான
வானகத் தந்தையை நம்புகிறேன்-2
2.அவரொரே திருமகன் கன்னியிடம்
அனைவரின் நாதர் கிறிஸ்துவாய்
அவதரித்ததையும் நம்புகிறேன் – 2
3. பிலாத்துவின் கீழவர் சிலுவையதில்
பெரும்பாடுகளுடன் இறந்தடங்கி
பெருங்குழி புகுந்ததை நம்புகிறேன் – 2
4.உயிரோடெழுந்தார் மூன்றாம் நாள்
உயிரே எழுந்து பரன்வலமே
உடனிருப்பதையும் நம்புகிறேன் -2
5.உயிருள்ளோரும் இறந்தோரும்
உண்மையாம் தீர்ப்பை அடைந்திடவே
உறுதியாய் வருவார் நம்புகிறேன் – 2
6.தூயாவி தூயோர் சபை உறவு
பாவமன்னிப்பு உடல் உயிர்ப்பு
மெய்நிலை வாழ்வையும் நம்புகிறேன் – 2