varththikkap pannuvar – (nam)

வர்த்திக்கப்பண்ணுவார்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வர்த்திக்கப் பண்ணுவார் – (நாம்)
குறுகிப் போவதில்லை மகிமைப்படுத்துவார் – (நாம்)
சிறுமை அடைவதில்லை -2
தாங்குவார் உயர்த்துவார்
ஏந்துவார் நம்மை நடத்துவார்
அல்லேலூயா அன்பு தேவன்
அல்லேலூயா இயேசு இராஜன் -2
வாழ்விலே என்ன சோகமா
எதிர் காலத்தை குறித்த கலக்கமா
வாக்குத்தத்தங்கள் உன் வாழ்க்கையில்
பலிக்குமா என்ற தயக்கமா – 2
தயங்காதே உன்னை உயர்த்துவார்
கலங்காதே வழி காட்டுவார் -2 – அல்லேலூயா
பாவத்தின் பரிகாசத்தால் பரிசுத்ததில் போராட்டமா
எவ்வளவோ போராடியும் – ஜெப
வாழ்க்கையில் என்ன தோல்வியா – 2
சோராதே நன்மை செய்பவர்
திகையாதே ஜெயம் தந்திடுவார் -2 – அல்லேலூயா
கடன் பாரத்தால் என்ன கவலையா
குடும்ப சமாதானம் இன்றி வேதனையா
சத்துருவின் தொடர் அம்புகளால்- உன்
இதயத்தில் என்ன காயங்களா -2
சர்வ வல்லவர் இன்று உனக்குள்ளே
சத்துருவோ உன் காலின் கீழே -2 – அல்லேலூயா