vazhvum vazhiyum unmai oliyum

வாழ்வும் வழியும் உண்மை ஒளியும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

வாழ்வும் வழியும் உண்மை ஒளியும்
எந்தன் தலைவன் இயேசுவெ
உயிரில் கலந்து என்னில் நிலைத்து
உயர்வு தருபவர் இயேசுவே
எந்தன் தலைவன் இயேசுவே
1. அன்பின் ஆழம் இயேசுவே
உறவின் பாலம் இயேசுவே
நண்பனுக்காக உயிரைக் கொடுக்கும்
நட்பின் இலக்கணம் இயேசுவே
தரணி வாழ தன்னைத் தந்த
தியாக தீபம் இயேசுவே
எந்தன் தலைவன் இயேசுவே
2. என்னை மறந்தேன் இயேசுவே
உன்னில் கலந்தேன் இயேசுவே
உந்தன் பாதை எந்தன் தேடல்
என்று உணர்ந்தேன் இயேசுவே
உன்னைப் போல நானும் வாழ
என்னுள் இருப்பாய் இயேசுவே
எந்தன் தலைவன் இயேசுவே