vedanin kannikkum

வேடனின் கண்ணிக்கும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வேடனின் கண்ணிக்கும் பாதுகாப்பார்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் பாதுகாப்பார்
அக்கினி சூளைக்கும் பாதுகாப்பார்
கண்மணி போல் காத்திடுவார்
உன்னதமானவர் மறைவினிலே
கெம்பீரமாக துதித்திடுவேன்
சர்வ வல்லவர் கரமதிலே
உள்ளம் கையில் வரையப்பட்டேன்-2
அவர் அடைக்கலம் என் கோட்டை
நான் என்றும் நம்பிடும் தேவன்-2-உன்னதமானவர்
1.சிறகுகளில் என்னை மூடிக்கொள்வார்
செட்டையின் கீழ் என்னை மறைத்துக்கொள்வார்
வழிகளில் எல்லாம் என்னை காத்துக்கொள்ள
தம் சேனையை அனுப்பிடுவார்-2-உன்னதமானவர்
2.இரவில் பயங்கரம் நெருங்காது
பகலில் அம்புக்கும் பயம் ஏது
சேனையின் கர்த்தர் என்னோடு
எந்த தீங்கும் அணுகாது-2-உன்னதமானவர்