Veeradhi Veerar

வீராதி வீரர் இயேசு சேனை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Palm Sunday Songs collection.

1.வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் ,
சேனை நாங்கள் ,இயேசுவின் சேனை நாங்கள் .
2.திரு வசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம் ,
திரிந்து சொல்வோம் ,அதை அறிந்து சொல்வோம் .
3.அறிவீன மென்னும் காட்டை அதமாக்குவோம்
அதமாக்குவோம் ;ஞானமதால் தாக்குவோம் .
4.சிலுவை கொடியைச் சேரத் தேடிப் பிடிப்போம்
தேடிப் பிடிப்போம் ,அன்பு கூர்ந்து பிடிப்போம் .
5.ரட்சண்ய சீராவுடன் நீதிக் கவசம்
நீதிக் கவசம் கையாடுவோம் வாசம்.
6.விசுவாசக் கேடகத்தை மேலுயர்த்துவோம்
மேலுயர்த்துவோம் அதை மேலுயர்த்துவோம் .
7.பாவச் சோதனைத் தடைகள் பாசம் நீக்குவோம் ,
பாசம் நீக்குவோம் ; ஆசாபாசம் போக்குவோம்