1.venmaiyana ithayam thanthitum

வெண்மையான இதயம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

1.வெண்மையான இதயம் தந்திடும்
ஜீவ ஊற்றண்டை வைத்துக்காத்திடும்
தீமை சுயம் பெருமையினின்று
தூய்மையாய் கல்வாரியில் வைத்திடும்
வெண்மையான ஓர் இதயம்
நீரல்லால் யாரிடம் நான் செல்லுவேன்
நேசித்ததால் மரித்தீரே
வெண்மையான இதயம் தந்திடும்
2.வெண்மையான இதயம் தந்திடும்
நேசமுள்ள அமைதி தந்திடும்
மேலோக ஆசியால் புதிதாக்கும்
உம் சேவைக்கு ஆயத்தமாக்கிடும்
3.வெண்மையான இதயம் தந்திடும்
ஜூவாலிக்கும் துாய ஆவியுடனும்
உண்மையுள்ள அன்பினால் நிரப்பும்
அவ்வன்பு பயத்தை நீக்கிடவும்
4.வெண்மையான இதயம் தந்திடும்
அறிவு கிருபையில் வளரவும்
மாதிரியாய் நான் வளர்ந்திடவும்
ராஜாவைப் பார்த்திடும் நாள் வரையில்