vetham sollum varththai athu

வேதம் சொல்லும் வார்த்தை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வேதம் சொல்லும் வார்த்தை அது
என் மனதின் ஓரத்தை உடைக்கிறதோ
வேதம் சொல்லும் வார்த்தை அது
என் மனதின் ஆழத்தை தகர்க்கிறதோ
சிலுவை காட்டும் பாதை அது
வலியை துயரை கொடுக்கிறதோ…
வேதம் சொல்லும் வார்த்தை அது…
சரணம் 1.
ஆழமாய் உளையில் அமிழ்ந்திருக்கிறேன்
நிலையாத நீரினில் ஆழ்ந்திருக்கிறேன்
குளிர் வாடை காற்றில் வெம்மை தேடி அலையும் மனம் தானே
கடும் கோடை நாளில் தணலை தேடி ஏங்கும் நரன் நானே
வரும் பாதை தான் எவ்வழியோ
என் நம்பிக்கை தளர்கின்றதே…
வேதம் சொல்லும் வார்த்தை அது
உன் மனதின் ஆழத்தை புடமாக்கும்
சிற்பியை போலே செதுக்குவதால்
சற்றே வலியும் துயரும் வரும் போகும்
சிலுவை காட்டும் பாதை அது
உனையும் எனையும் மெய் சேர்க்கும்
வேதம் சொல்லும் வார்த்தை அது….
சரணம் 2.
எக்காளத்தின் ஒலியால் அரணை தகர்த்திட்டார்
ஆழி கடலினை பிளந்து பாதை காட்டினார்
அதிசயங்கள் செய்யும் ஒருவர் என்றும் நமக்குண்டு
நற்பாதை காட்டும் நல்ல மேய்ப்பன் இங்கே உனக்குண்டு
நீ கலங்காதே என் மனமே
நம் தோழனாய் நல் மீட்பரே
வேதம் சொல்லும் வார்த்தை அது
நம் இதயத்தின் காயத்தை குணமாக்கும்
வேதம் சொல்லும் வார்த்தை அது
நம் மனதின் ஆழத்தை அழகாக்கும்
சிலுவை காட்டும் பாதை அது
உனையும் எனையும் மெய் சேர்க்கும்