Vetkappattup Povathillai

வெட்கப்பட்டுப் போவதில்லை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வெட்கப்பட்டுப் போவதில்லை நீ
வெட்கப்பட்டுப் போவதில்லை
கர்த்தரைத் தன் துணையாய் கொண்டிருக்கும்
ஜனமே வெட்கப்பட்டுப் போவதில்லை
1.ஆபிரகாமை போல சொந்த குமாரனையே
பலியிடத் துணிந்தாலும்
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
ஏகோவா யீரே எல்லாம் பார்த்துக் கொள்வார்
வெட்கப்பட்டுப் போவதில்லை
2.செங்கடலோ முன்னே பார்வோனோ பின்னே
வழியின்றி திகைத்தாலும் நீ வெட்கப்பட்டுப் போவதில்லை வழிகாட்டும் தேவ வல்லமை உண்டு
வெட்கப்பட்டுப் போவதில்லை
3.ஆராதனைக்காக கையை கட்டி காலை கட்டி
அக்கினியில் போட்டாலும் நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
ஏகோவா ஷம்மா உன்னோடு வருவார்
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை பாடல் வரிகள், Vetkapattu Povathillai Nee Lyrics. tamil songs.