Viduvikkindravar Yesu Lyrics

விடுவிக்கின்றவர் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

விடுவிக்கின்றவர் நம் இயேசு
விடுதலை தந்திடுவார்
பாவத்தில் இருந்தும் விடுவிப்பார்
சாபத்தில் இருந்தும் விடுவிப்பார்
சாத்தானின் பிடியிலிருந்தும் விடுவிப்பார்
ஆமென் ஆமென் அல்லேலூயா (4)
சத்தியத்தை அறிந்து கொண்டு
நித்தியத்தை தெரிந்து கொள்வோம்
சத்துருவை மிதித்து, பாவத்தை வெறுத்து
பரிசுத்த வாழ்வு வாழ்ந்திடுவோம்
ஆமென் ஆமென் அல்லேலூயா (4)
இயேசுவின் இரத்தம் கொண்டு
நேசரின் சத்தம் கேட்போம்
உன்னதரை துதித்து உலகத்தை ஜெயித்து
உயிருள்ள வாழ்வு வாழ்ந்திடுவோம்
ஆமென் ஆமென் அல்லேலூயா (4)
அபிஷேகம் பெற்றுக்கொண்டு
அக்கினித்தனலாக மாறிடுவோம்
ஆவியால் நிறைந்து அகிலத்தை அசைத்து
அழியாத வாழ்வினை அடைந்திடுவோம்
ஆமென் ஆமென் அல்லேலூயா (4)