vikkinangkal katanthupookum – Vikkinangal Kadanthupogum

விக்கினங்கள் கடந்துபோகும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

விக்கினங்கள் கடந்துபோகும் – Vikkinangal Kadanthupogum
விக்கினங்கள் கடந்துபோகும்,
கர்த்தர் உன்னை, காப்பாரே;
கோழி தன் குஞ்சுகள், காப்பது போல,
செட்டைகள் நிழலில், மூடுவாரே -(2)
1) தண்ணீர்களை நீ, கடக்கும்போது
அது உன்மேலே, புரளுவதில்லை -(2)
அக்கினையூடே, நடக்கும் போதும்,
அதுவும் உன்னை, பற்றிடாதே -(2) -(விக்கினங்கள்)
2) வியாதி வறுமை, தனிமையானாலும்,
காண்கிற தேவன், உனக்குண்டே -(2)
தாயினும் மேலாய், நேசிக்கிறார் உன்னை,
தந்தைபோல் தோளில், சுமப்பாரே -(2) – (விக்கினங்கள்)
3) பாவமோ சாபமோ, தோல்வியானாலும்,
கூப்பிடும் வேளை, இரட்சிப்பாரே -(2)
தன் ஜீவனையே, உனக்கீந்தாரே,
இயேசுவைவே நீ, நம்பியே வா -(2) -(விக்கினங்கள்)
4) குயவன் கைகளில், களிமண்ணைப்போல
வனைந்து மகிமை படுத்திடுவார் -(2)
உனக்காக யாவையும், செய்து முடிப்பாரே,
உன்னததேவனை, துதித்திடுவாய் -(2)- (விக்கினங்கள்)