vilaiyerapperra um iraththaththal

Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Advent Songs collection.

விலையேறப்பெற்ற உம் இரத்தத்தால்
என்னையும் மீட்டவரே
கல்வாரி காட்சியைக் கண்டு கொள்ள
என் கண்கள் திறந்தவரே
என் ஆராதனை உமக்கே
என்னை அலங்கரிக்கும்
என் ஆண்டவரே
வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர்
வழுவாமல் சுமக்கின்றீர்
திருவசனத்தால் என்னை திருப்தியாக்கி
அனுதினம் நடத்துகிறீர்
ஆணிகள் பாய்ந்த கரங்களாலே
என்னையும் அணைப்பவரே
கொல்கொதாவின் அன்பைக் கண்டதாலே
கொள்ளைநோயைக் கண்டு
நான் கலங்கிடேனே
வலதுக்கும் இடதுக்கும் திசை அறியா
என்னையும் அழைத்தவரே
தோற்றுப்போன என்னையுமே
ஜெயாளியாக மாற்றினீரே
விலையேறப்பெற்ற உம் இரத்தத்தால்
என்னையும் மீட்டவரே
கல்வாரி காட்சியைக் கண்டு கொள்ள
என் கண்கள் திறந்தவரே
என் ஆராதனை உமக்கே
என்னை அலங்கரிக்கும்
என் ஆண்டவரே