vin ekumun nal – Vin Yeagumun Nal

விண் ஏகுமுன் நல்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

விண் ஏகுமுன் நல் – Vin Yeagumun Nal
1.விண் ஏகுமுன் நல் வார்த்தையை
நம் மீட்பர் மொழிந்தார்;
மா தூய தேற்றரவாளனை
வாக்களித்தார்.
2.அவ்வாறு வல்ல ஆவியே
சகாயராய் வந்தார்;
மெய்ப் பக்தர் நைந்த நெஞ்சிலே
சஞ்சரிப்பார்.
3.ஆகாத சிந்தை தோன்றினால்
மேலிடவே ஒட்டார்;
வீண் பயமும் மென் சொல்லினால்
அகற்றுவார்.
4.நற்குணம், செய்கை, விருப்பம்
மெய்ப் பக்தி யாவுமே
தேவாவியாலே மாத்திரம்
உண்டாகுமே.
5.மா தூய நேச ஆவியே,
தாசர்க் கிரங்குமேன்;
சுத்தாங்கம் தந்து நெஞ்சிலே
வந்தாளுமேன்.