vinmeengal olirndhu kalikindrana

விண்மீன்கள் ஒளிர்ந்து களிக்கின்றன

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

விண்மீன்கள் ஒளிர்ந்து களிக்கின்றன
விண்தூதர் மகிழ்ந்து துதிக்கின்றன
மண்ணுலகில் பிறக்கும் தேவனின்
மைந்தன் துதி பாடும் நேரம்
இருளோ துயரோ இனிமேல்
உலகில் துணிந்தே வருமா
தீர்க்கர்கள் உரைத்த வாக்குகள் நிறைவேறிடும் நாள் இதே
தேவனின் திட்டம் பாரினில் செயலாகும் நல் நேரமே
விடுதலை உலகிலே வந்ததே
அழியா வாழ்வை தரவே
மனு உருவாய் வரும் இறை மகனே
கீதங்கள் ஒளிக்க மானிடர் கொண்டாடிடும் காலமே
பாவங்கள் அகல தேவனை சரணாகும் வேளையே
இறைவனின் கிருபையின் வரமிதே
மனுவாய் நெரில் வரவே
இனி வரும் நாள் ஒரு குறையில்லையே