vinnaiththanti vanthavare – Vinnai Thaandi Vanthavarae

விண்ணைத்தாண்டி வந்தவரே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

விண்ணைத்தாண்டி வந்தவரே – Vinnai Thaandi Vanthavarae
விண்ணைத்தாண்டி வந்தவரே
மண்ணில் வந்து தவழ்ந்தவரே -2
ஏழைக் கோலம் ஏற்றவரே
எனை மீட்க வந்தவரே -2
உம்மை வாழ்த்திப்பாடுவேன்
உம்மை போற்றி மகிழுவேன் -2
1. வானத்திலே புது நட்சத்திரம்
வழியை காட்டியே சென்றதுவே -2
ஆயர்களும் பாட்டுப்பாட
ஆனந்தமாய் ஆட்டம் போட-2
முன்னனை பாலனை பணிந்தனரே
முடிவில்லா ஆனந்தம் கண்டனரே-2
என் பிரியமே என் ஜீவனே
என் செல்லமே சின்னப்பாலா-2 -விண்ணைத்தாண்டி
2. உலகமெல்லாம் உம்மை போற்றிடுமே
உந்தன் பிறப்பை பேசிடுமே-2
மேகமெல்லாம் தாளம் போட
மான்கள் எல்லாம் துள்ளி ஆட-2
தென்றல் காற்று இசையானது
தேனிசை கானம் சுகமானது -2
என் சுவாசமே என் நேசமே
எந்நாளும் சந்தோஷமே-2 -விண்ணைத்தாண்டி