vinnappaththai ketpavar

விண்ணப்பத்தை கேட்பவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

விண்ணப்பத்தை கேட்பவர்
விடுதலையை தருபவர்
வானும் மண்ணும் மாறினாலும்
வாக்கு மாறா உன்னதர் (2)
அல்லேலூயா பாடி துதிப்பேன் இயேசுவை (4)
விண்ணப்பத்தை
சிங்க கெபியோ, சூளை நெருப்போ
சிறிதும் பயமே இல்லையே (2)
வல்ல தேவன் என்னுடனே
வல்லமையாய் விடுவிப்பார் (2) – அல்லேலூயா
வியாதி வறுமை, துன்பம் தொல்லை,
விலகி ஓடுதே இயேசுவால் (2)
விசுவாசத்தால் சுகத்தை பெறுவேன்
வெற்றிவேந்தன் கிருபையால் (2) – அல்லேலூயா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடருமே (2)
கர்த்தர் வீட்டில் ஆனந்தமாய்
களிப்புடனே வாழ்வேனே (2) – அல்லேலூயா