vinnile makimaiye

விண்ணிலே மகிமையே
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

விண்ணிலே மகிமையே
மண்ணிலே சமாதானமே
மண்ணிலே மனுஷர்மேல்
பிரியமும் உண்டாகுதே
உன்னதத்தின் தேவன் இயேசு
தம் மகிமை துறந்தார்
மனுகுலத்தை இரட்சிக்க
மண்ணில் வந்து பிறந்தார் – விண்ணிலே
சாஸ்திரிகள் இயேசுவையே
காண ஆவல் கொண்டார்
விடி வெள்ளி வழிகாட்ட
கண்டு பணிந்து மகிழ்ந்தார் – விண்ணிலே
பொக்கிஷங்கள் திறந்தே
பொன்னையுமே தந்தார்
வெள்ளை போளம் தூபவர்கம்
காணிக்கயாய் வைத்தார் – விண்ணிலே
தூதர்களும் மேய்ப்பருக்கு
நற்செய்தி சொன்னார்
தாவீதின் ஊரில் வந்து
இயேசு பிறந்துள்ளார் – விண்ணிலே