virunthithu aanma virunthithu – Virunthithu Aanma Virunthithu

விருந்திது ஆன்ம விருந்திது
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

விருந்திது ஆன்ம விருந்திது – Virunthithu Aanma Virunthithu
பாடல் வரிகள் – திருவிருந்துப் பாடல்
விருந்திது விருந்திது ஆன்ம விருந்திது
உடலும் இரத்தமும் உணவாய் மாறிய விருந்திது விருந்திது
விருந்திது விருந்திது இயேசுவின் உணவிது
கல்வாரி பலியில் கலந்து வந்த உணவிது உணவிது
வாழ்வு தரும் (உணவே வாரும்) – 2
வழிகாட்டும் (உணவே வாரும்) – 2
அழியா (உணவே வாரும்) – 2
என்னில் (எழுந்து வாரும்) – 2
1. விண்ணிலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு
இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றதல்ல – 2
அதை உண்டவர் இறந்து போனார்கள்
என்னை உண்பவர் என்னால் வாழ்வார்
நானும் அவரை இறுதி நாளில் உயிர்தெழச் செய்வேன்
இந்த உணவை உண்ட எவரும்
என்றுமே வாழ்வர் – (வாழ்வு தரும்)
2. எனது சதையும் எனது ரத்தமும் உண்மையான உணவு என்னை உண்போர் எல்லோருமே என்னில்
என்றும் இணைவர் – 2
அவர்களோடு நானும் இணைந்திருப்பேன்
உலகு வாழ கொடுத்தேன் நிலை வாழ்வை தந்தேன்
வாழும் தந்தை அனுப்பினார் நானும் அவரால் வாழ்கின்றேன் கிறிஸ்து என்னில் வாழ சாட்சியாய்
என்றுமே வாழுவேன் – (வாழ்வு தரும்)