Visuvasikkinraen, Visuvasikkinraen

விசுவாசிக்கின்றேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

விசுவாசிக்கின்றேன், விசுவாசிக்கின்றேன்,
என் இயேசுவையே விசுவாசிக்கின்றேன் (2)
எனக்காய் இவ்வுலகத்திற்கு வந்தார்
எனக்காய் சிலுவையை சுமந்தார்
எனக்காய் இரத்தம் சிந்தினார் (2)
எனக்காய் ஜீவனை கொடுத்தார்
எனக்காய் உயிர்த்து எழுந்தார்
எனக்காய் மீண்டும் வருகின்றார் (2)
எனக்காய் பரிந்து பேசுகிறார்
எனக்காய் யுத்தம் செய்கிறார்
எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் (2)