viviliyam patippoom

விவிலியம் படிப்போம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

விவிலியம் படிப்போம்
திருவிவிலியம் படிப்போம்
காலையில் எழுந்ததும் கடவுளை தொழுது
கண்ணும் கருத்துமாய் நாளும் தொடர்ந்து வர
விவிலியம் படிப்போம்
திருவிவிலியம் படிப்போம்
1. மோசே தந்த சட்ட நூல்கள் இங்கு மொத்தம் ஐந்தாகும்
தோரா என்று எபிரேயத்தில் அதற்கு பெயராகும்
தொடக்க நூல் முதல் விடுதலைப்பயணம் லேவியர்
எண்ணிக்கை இணைச்சட்டம் ஐந்தும் தோரா என்றாகும்
வரலாற்று நூல்கள் எண்ணிக்கை வகையில் மொத்தம் பதினாரு
யோசுவா நீதிதலைவர்களுடனே ஒன்று இரண்டு சாமுவேல் ஒன்று இரண்டு அரசர்கள் ஆறும் சேர்ந்தது இணைச்சட்ட வரலாறு
ஒன்று இரண்டு குறிப்பேடு எஸ்ரா நேகேமியா குறிப்பேட்டு வரலாறு
மக்கபேயர் ஒன்றும் மக்கபேயர் இரண்டும் மக்கபேயர் வரலாறு
ரூத்து எஸ்தருடன் தோபித்து யூதித்து மறைக்கல்வி வரலாறு
விவிலியம் படிப்போம்
திருவிவிலியம் படிப்போம்
காலையில் எழுந்ததும் கடவுளை தொழுது
கண்ணும் கருத்துமாய் நாளும் தொடர்ந்திட
விவிலியம் படிப்போம்
திருவிவிலியம் படிப்போம்
2. இறைவனின் கூரலை எடுத்து செல்பவர் இறைவாக்கினர் ஆவார்
தூய ஆவியின்‌ வழியில் நடத்தி செல்வதே நெவிலின் நூலாகும்
பெரிய இறைவாக்கினர் சிறிய இறைவாக்கினர் எண்ணிக்கை பதினாரு
எசாயா எரேமியா எசேக்கியேல் தானியேல் பெரிய இறைவாக்கினராம்
அதில் ஆறு புலம்பல் நூல்களை கொண்ட‌ எண்ணிக்கை ஆறாகுமாம்
ஒசேயா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீக்கா நாகூம் அபகூக் செப்பனியா ஆகாய் செக்கரியா மலாக்கி 1 2 3 4 என்னோடு எண்ணு சிறிய இறைவாக்கினர் total பனிரெண்டு
வாழவும் செபிக்கவும் வழிகள் காட்டவும் நூல்கள் இங்குண்டு
அறிவுரை வழங்கும் கேத்துபின் நூல்கள் எண்ணிக்கை ஏழுண்டு
யோபு திருப்பாடல் நிதிமொழி சபையுரையாளர் இனிமைமிகுப்பாடல் சாலமோனின் ஞானம் சீராக்கின் ஞானம் ஆகியவை இவையே அறிவுரை நூலாகும்
விவிலியம் படிப்போம்
திருவிவிலியம் படிப்போம்
காலையில் எழுந்ததும் கடவுளை தொழுது
கண்ணும் கருத்துமாய் நாளும் தொடர்ந்திட
விவிலியம் படிப்போம்
திருவிவிலியம் படிப்போம்
3. மத்தேயு மாற்கு லூக்கா யோவான் நான்கும் நற்செய்தி
திருத்தூதர்பணியும் திருச்சபை உணர்த்தும் மேலான வரலாறு
உரோமையர் ஒன்னு இரண்டு கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசையர்
ஒன்னு இரண்டு தெசலோனிக்கர் ஒன்னு இரண்டு திமோத்தேயு தீத்து பிலமோன் ஆகிய கடிதம் மொத்தம் பதிமூன்று
இவை அனைத்தும் எழுதிய பவுலின் வாழ்வும் நமக்கு வரலாறு
இதனை தொடர்ந்து வருகின்ற மடலும் எபிரேயர் மடலாகும்
யாக்கோபு திருமுகம் ஒன்னு இரண்டு பேதுரு ஒன்னு இரண்டு மூன்று யோவான் யூதா ஆகிய ஏழும் பொதுவான மடலாகும்
இறுதியில் உள்ள திருவெளிபாடு தனித்துவ நூலாகும்
பழைய ஏற்பாட்டில் 46
புதிய ஏற்பாட்டில் 27
ஆக மொத்தத்தில் 73
இவையே விவிலிய நூல்களின் பெயரு
விவிலியம் படிப்போம்
திருவிவிலியம் படிப்போம்
காலையில் எழுந்ததும் கடவுளை தொழுது
கண்ணும் கருத்துமாய் நாளும் தொடர்ந்திட
விவிலியம் படிப்போம்
திருவிவிலியம் படிப்போம்