Worship Medley 3 Kirubai Purindhenai Nambi Vandhen

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Praise Songs and Worship Songs collection.

கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்
கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள்
திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து-2
வரில்நரனாகிய மா துவின் வித்து!-2-கிருபை
தந்திரவான்கடியின் சிறைமீட்டு-2
எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு-2-கிருபை
நம்பி வந்தேன் இயேசையா
நான் நம்பி வந்தேனே
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே-2
தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே-2
வரு தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே-2-நம்பி
இயேவையே துதிசெய், நீ மனமே
இயேசுவையே துதிசெய் – கிறிஸ்தேசுவையே
அந்தரவான் தரையுந் தரு தந்தன்-2
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன்-2-இயேசுவையே
எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே
நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்-2
உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில்
அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர்-2
ஆ! ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்-2
இயேசுவே எந்தன் ஆருயிரே-2
உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்-2
உம்மையல்லாதிப் பூமியில்
யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வம் நீரே-2-ஆ! ஆனந்தம்