Yaakobu Verpatri Lyrics

யாக்கோபு வேர்பற்றி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யாக்கோபே நீ செழித்திடுவாய்
பூத்து காய்த்து கனி தருவாய்
இஸ்ரவேலே நீ பலன் தருவாய்
உன் பலனால் பூமியை நிரப்பிடுவாய்
யாக்கோபு வேர்பற்றி பூப்பூத்து காய்காய்க்கும் நாட்கள் வரும்
இஸ்ரவேல் தன் பலனால் பூமியை நிரப்பும் நாட்கள் வரும்
1.வனாந்திரம் வயல் வெளியாய் மாறும்
அவாந்திரம் தண்ணிர் தடாகமாய் மாறும்
வறண்ட உன் வாழ்க்கை செழிப்பாகும்
வறட்சி எல்லாம் செழிப்பாகும்
2.கோணலானவை செவ்வையாக மாறும்
இருளான பாதை வெளிச்சமாக மாறும்
கண்ணிரெல்லாம் களிப்பாகும்
வறட்சியெல்லாம் செழிப்பாகும்