yaar unnai marathalum

யார் உன்னை மறந்தாலும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யார் உன்னை மறந்தாலும்
இயேசு உன்னை மறப்பதில்லை உன்
தந்தை தாயும் மறந்தாலும்
இயேசு உன்னை மறப்பதில்லை யார்
1. துன்பம் துயரங்கள் வாழ்வில்
வந்தாலும் துளியும் பயமில்லையே
நிந்தை நாள்தோறும் நெருங்கி வந்தாலும்
இதயத்தில் கலக்கம் இல்லை
உன் கண்ணீர் களிப்பாக மாறுமே உன்
கவலை எல்லாமே தீருமே நம்
இயேசுவின் நாமத்திலே
2. பாடு பெலவீனம் எதுவும்
வந்தாலும் விடுதலை தந்திடுவார்
மனதில் பாரங்கள் நெருக்கும்
வேளையில் வேண்டுதல் கேட்டிடுவார்
உன் தோல்வி ஜெயமாக மாறுமே
உன் வாழ்வு சந்தோஷமாகுமே
நம் இயேசுவின் நாமத்திலே
3. நமது எதிர்காலம் நேசர்
இயேசுவின் கரங்களில் இருக்கிறது
மனது தேவனின் தூய ஆவியால்
மகிழ்ந்தே துதிக்கிறது
இனி வாதை நம் வாழ்வில் இல்லையே நாம்
பயந்து வாழ்வதும் இல்லையே
நம் இயேசுவின் நாமத்திலே