yacobin thoolai

யாக்கோபின் தூளை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யாக்கோபின் தூளை
எண்ணத்தக்கவன் யார்?
இஸ்ரவேலின் காற்பங்கை
எண்ணுபவனும் யார்?
கூடாதே கூடாதே
யாராலும் கூடாதே
முடியாதே முடியாதே
ஒருநாளும் முடியாதே-யாக்கோபின்
1.சின்னவனை ஆயிரமாக்கிடுவீர்
சிறியவன் பலத்த ஜாதியுமாவானே
ஏற்ற காலத்தில் செய்பவரே
எங்கள் நாட்களில் செய்திடுமே-2-கூடாதே
2.ஒடுக்கிட நினைப்பவர் மத்தியிலே
பலத்திட செய்திடும் அற்புதரே
மந்தை பலுகி பெருகும் போல
எங்கள் ஜனங்களை பெருக செய்யும்-2-கூடாதே
3.அழித்திடும் ஆமான்கள் நடுவினிலே
துணை நின்று விடுவிக்கும் நல்லவரே
எங்கள் எதிரிகளை சிறுமையாக்கி
எங்களை நீர் பரவ செய்தீர்-2-கூடாதே