yahweh en adaikalam

யாவே யாவே என் அடைக்கலம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யாவே யாவே என்
அடைக்கலம் எந்தன் பெலனே
யாவே யாவே என்
ஆபத்தில் நல்ல துணையே – 2
நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்
எங்களை விடுவிக்க வல்லவரே – 2
நம்பிடுவேன் எந்தன் கரம் பிடித்தீரே
ஆராதிப்பேன் எந்தன் ஜெயக்கொடி நீரே – 2
அலைகள் மத்தியில் அமிழ்ந்திடும்(அமிழும்) போது
உம்மை அல்லாமல் யாரும் எனக்கில்லையே – 2
நீரே என் கோட்டை
நீரே என் தஞ்சம்
நீரே என் தேவன் நீரே – 2
நம்பிடுவேன் எந்தன் கட்டுகளை அறுத்தீரே
ஆராதிப்பேன் எந்தன் நுகங்களை முறித்தீரே- 2
அலைகள் மத்தியில் அமிழும் போது
உம்மை அல்லாமல் யாரும் எனக்கில்லையே -2
நீரே என் கோட்டை
நீரே என் தஞ்சம்
நீரே என் தேவன் நீரே – 2