yakkoope nee… payanthitathe

யாக்கோபே நீ பயந்திடாதே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யாக்கோபே நீ… பயந்திடாதே
இஸ்ரவேலே… நீ கலங்கிடாதே – 2
எதிர் காலமே நீ எனை சூழ்ந்து நின்றாலும்
எதிரியே நீ என்னை பார்த்து நகைத்தாலும் – 2
இதுவரை காத்தவர் இனிமேலும் காப்பார்
வாழ்நாள் முழுவதும் என்னை காப்பார் – 2
பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
பாதைக்காட்ட இயேசு உண்டு எந்நாளும் -2
இருளில் வாழ்ந்தேனே பாதையற்று நின்றேனே
அங்கும் இங்கும் நான் திசை மாறி அலைந்தேனே -2
பாதையாய் இயேசு என் முன்னே நின்றாரே
கண்…மணிபோல் என்னை அக்கரையில் சேர்த்தாரே – 2
வெண்கல கதவுகள் அடைத்தாலும்
இரும்பு தாழ்ப்பாள்கள் பூட்டினாலும் – 2
உன்னத தேவனே உந்தன் நாமம் உயர்த்துவேன்
நீதியின் சூரியனே உந்தன் நாமம் போற்றுவேன் – 2
சேனைகளின் தேவனாய் என் பக்கம் நிற்பாரே
இரும்பு தாழ்ப்பாள்கள் முறிக்க செய்வாரே – 2
யாக்கோபே நீ… பயந்திடாதே
இஸ்ரவேலே… நீ கலங்கிடாதே – 2
எதிர் காலமே நீ எனை என்னை சூழ்ந்து நின்றாலும்
எதிரியே நீ என்னை பார்த்து நகைத்தாலும் – 2
இதுவரை நடத்தினவர் இனிமேலும் நடத்துவார்
வாழ்நாள் முழுவதும் என்னை நடத்துவார் – 2 (சொல்லு)