yakkoope! nee payappatathe

யாக்கோபே நீ பயப்படாதே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யாக்கோபே! நீ பயப்படாதே
இஸ்ரவேலே நீ பயப்படாதே – 2
நான் உனக்கு துணை நிற்கிறேன்
உன்னை வழுவாது காத்திடுவேன் – 2
யாக்கோபே!
1.உன்ணை மீட்டுக்கொண்டேன்
உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் – 2
நீ என்னுடையவன், நீ என்னுடையவன்
எனக்கே சொந்தமானவன் – 2
யாக்கோபே!
2.தண்ணீரைக் கடக்கும் போதும் (நீ)
ஆறுகளை கடக்கும் போதும் – 2 – நீ
அக்கினியில் நடக்கும் போதும்
உன்னோடு நான் இருப்பேன் – நீ – 2
யாக்கோபே!
3.மலைகளை நொறுக்கும்படி
குன்றுகளை தகர்க்கும்படி – 2 – உன்னை
கூர்மையான பற்களுள்ள
யந்திரமாக்குகிறேன். – 2
யாக்கோபே!
யாக்கோபே நீ பயப்படாதே பாடல் வரிகள்,Yakkopae Ne Payappadatha Lyrics