Yakobennum Sirupoochiye Bayapadathe

யாக்கோபென்னும் சிறு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

யாக்கோபென்னும்
சிறு பூச்சியே பயப்படாதே!
நான் துணை நிற்கிறேன்.
இஸ்ரவேலின்
சிறு கூட்டமே பயப்படாதே!
நான் துணை நிற்கிறேன். -2
என் யாக்கோபே-3
பயப்படாதே,
நான் துணை நிற்கிறேன் -2
யாக்கோபே-2 என் யாக்கோபே-2
பயப்படாதே
நான் துணை நிற்கிறேன் -2
1.உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்
நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய்-2
உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன்-2
2.உனது முகம் இனி வெட்கம் ஆவதில்லை
உனது முகம் இனி செத்து போவதில்லை-2
இனி என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை -2
3.உனது பெயரை(வேரை) பரவ செய்திடுவேன்.
நீ பூத்து காய்த்து பூமியை நிரப்பிடுவாய்-2
உன் தூளை எண்ணத்தக்கவர் யாருண்டு?-2
உனக்கு எதிரான மந்திரமில்லையே
உனக்கு எதிரான குறியும் சொல்வதில்லை
நீ துஷ்ட சிங்கமாய் எழும்பி நிற்பாய்