yarumilla kaliyana kallarai – Yarumilla Kaaliyana Kallarai

யாருமில்லா காலியான கல்லறை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

யாருமில்லா காலியான கல்லறை – Yarumilla Kaaliyana Kallarai
யாருமில்லா காலியான கல்லறை
இதில் மூன்று நாள் முன் வைத்தனரே இயேசுவை
ஓடி வந்தேன் காணவே என் ஆண்டவரை
தேடி வந்தேனே அவரைக் காணவில்லை
அவரை எங்கே வைத்தாரோ
அவரை எடுத்து சென்றாரோ
அவர் எங்கே என்று சொல்லுங்கள் நான் எடுத்துக்கொள்கிறேன்
ஏன் அழுகின்றாய் நீ மரியாளே
உன் கண்ணீருக்கு இனிமேல் இங்கு வேலையில்லை
யாரைத் தேடுகின்றாயோ நீ மரியாளே
உயிர்த்தெழுந்துவிட்டாரே உன் ஆண்டவரே
அவர் சாவை வென்றாரே
அவர் பகையைக் கொன்றாரே
அவர் பாதாளத்தை ஜெயித்துவிட்டு வெற்றி சிறந்தாரே
யாருமில்லா காலியான கல்லறை
அது தந்திடுதே நமக்கெல்லாம் புது நம்பிக்கை
பாவங்களிலிருந்து விடுதலை
இனி சாபமென்பதே நமக்கென்றுமில்லை
சாவே உன் கூரெங்கே
பாதாளம் உன் ஜெயமெங்கே
சாவை ஜெயித்தவரே நமக்கு என்றும் ஜெயம் கொடுப்பாரே