Yehovah Devan Lyrics

யெகோவா தேவன் கண்ணீரெல்லாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யெகோவா தேவன் கண்ணீரெல்லாம் துடைப்பார்
யெகோவா தேவன் தோல்வியை ஜெயமாக்குவார் – 2
நீ கலங்கிடாதே, திகைத்திடாதே,
கர்த்தர் பார்த்துக்கொள்வார், தகப்பன் பார்த்துக்கொள்வார் – 2
எப்போது விடியுமென்று கண்ணுறங்க எத்தனை இரவுகள்,
எத்தனையோ நிந்தைகள் என்னை காரணமின்றி பகைத்தவர்கள்.
கொஞ்ச காலம் பாடு சகித்ததாலே,
நித்திய மகிழ்ச்சி உந்தன் பங்காகுமே – 2
யெகோவா தேவன் கண்ணீரெல்லாம் துடைப்பார்,
யெகோவா தேவன் தோல்வியை ஜெயமாக்குவார்.
நீ கலங்கிடாதே, திகைத்திடாதே,
கர்த்தர் பார்த்துக்கொள்வார், தகப்பன் பார்த்துக்கொள்வார் – 2
புரண்டோடும் வெள்ளங்களை, பற்றி எரிகின்ற ஜூவாலைகளை,
நான் சிறுமைப்பட்ட நாட்களை, துன்பத்தை கண்ட வருஷங்களை.
நினைத்த நிதம் என்னை மகிழ்ச்சியாக்கும்
ஊழியரின் சந்ததியை மகிமைப்படுத்தும் – 2
யெகோவா தேவன் கண்ணீரெல்லாம் துடைப்பார்,
யெகோவா தேவன் தோல்வியை ஜெயமாக்குவார்.
நீ கலங்கிடாதே, திகைத்திடாதே,
கர்த்தர் பார்த்துக்கொள்வார், தகப்பன் பார்த்துக்கொள்வார் – 2
இதுவரை நடத்தினவர்,
இனிமேலும் நடத்திடுவார் – 2
உன்னை மறப்பதில்லை, எப்போதும் மறப்பதில்லை,
உன் தகப்பன் மறப்பதில்லை, உன் ஜெபங்கள் மறப்பதில்லை.
ஆராதனை – 6 (உமக்கே)