Yelunbi Pragasi Un

எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது
கர்த்தர் மகிமை உன் மேல் உதித்தது
பூமியையும் ஜனங்களையும்
காரிருள் மூடும் – ஆனாலும்
உன்மேல் கர்த்தர் உதிப்பார்
உன் குமாரரும் குமாரத்திகளும்
உன் அருகினில் வளர்க்கப்படுவார்
உன் கண்ணால் கண்டு நீ ஓடி வருவாய்
உன் இருதயம் மகிழ்ந்து பூரிக்கும்
2.உன்னை சேவிக்கா ஜாதிகள் அழியும்
ராஜ்ஜியங்களும் பாழாகப் போய் விடும்
கர்த்தர் நகரம் பரிசுத்தரின் சீயோன்
என்று கூறி நீ அழைக்கப்படுவாய்
உன் தேசத்திலே கொடுமை கேட்காதே
உன் எல்லைகளில் நாசமும் வராதே
உன் மதில்களை இரட்சிப்பென்று சொல்வாய்
உன் வாசல்களைத் துதியென்றும் சொல்வாய்
சூரியன் இனி அஸ்தமிப்பதில்லை
சந்திரன் இனி மறைவதுமில்லை
கர்த்தரே நித்ய வெளிச்சமாவாரே
உன் துக்க நாட்கள் முடிந்து போயிற்றே
எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது பாடல் வரிகள், Elumbi Pirakasi Un Ozhi Vanthathu Lyrics