Yenge Sumandhu Pogirir Siluvaiyai Neer

எங்கே சுமந்து போகிறீர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs and Lent Songs collection.

எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்?
சரணங்கள்
1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமது
அங்கம் முழுவதும் நோக ஐயா , என் யேசு நாதா -எங்கே
2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலம் இல்லாமல்
தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் -எங்கே
3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர -எங்கே
4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின்தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பிவர – எங்கே
5. வல்லபேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் – எங்கே
6. மாசணுகாத சத்திய வாசகனே , உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காத சுமையை எடுத்து – எங்கே
7. வண்டக் கள்ளர் நடுவில் மரத்தில் தொங்குவதற்கோ
சண்டாளர்களைத் தூக்கும் தலையோட்டு மேட்டுக்கோ – எங்கே