Yennai kankindra Thevan Lyrics

என்னை காண்கின்ற தேவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை காண்கின்ற தேவன் கிறிஸ்தவ பாடல் வரிகள்
என்னை காண்கின்ற தேவன் என்றும் நீர்
சூழ்நிலைகளை மாற்றும் தேவன் நீர்-2
உம் அன்பு மாறாதது
உம் பாசம் முடியாதது-2
நான் கலங்கின நேரங்களில்
என் கூடவே இருப்பவரே
எண்ணிலடங்கா நன்மைகளை
நீர் செய்து முடித்தீரே
1.பாவங்கள் சாபங்கள் நீக்கிடவே
எனக்காக பலியானீர்
கொள்ளை நோய்கள் என்னை அணுகாமல்
எனக்காக அடிக்கப்பட்டீர்
அதற்கு நன்றி சொல்லி
என்றும் உம்மை துதிப்பேன்
உயிருள்ள வரை உம்மை என்றும்
நான் துதிப்பேன்-2-நான் கலங்கின
2.ஆபத்து நாட்களில் கூட இருந்து
எனக்காய் யுத்தம் செய்வீர்
மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
என்னோடு கூட வருவீர்
அதற்கு நன்றி சொல்லி
என்றும் உம்மை துதிப்பேன்
உயிருள்ள வரை உம்மை என்றும்
நான் துதிப்பேன்-2-நான் கலங்கின
Yennai kankindra Thevan Lyrics