Yesaiyaa Undhan Mugathai Theti

இயேசய்யா உந்தன் முகத்தை தேடி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசய்யா உந்தன் முகத்தை தேடி
ஆசையாய் வருகிறேன்
உந்தன் மெல்லிய சத்தம் கேட்டிட
ஆவலாய் துடிக்கிறேன்
அதிகாலையில் உமது பிரசன்னம்
எனக்கு இன்பம் ஆனது
பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா
காலையில் கர்த்தாவே உம்
கிருபையினால் நிரப்பிடுமே
பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா
காலையில் கர்த்தாவே உம்
பிரசன்னத்தினால் நிறைத்திடுமே
பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா
காலையில் கர்த்தாவே உம்
மகிமையினால் நிறைத்திடுமே
பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா