Yesu En Kanmalaiyae

இயேசு என் கன்மலையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு என் கன்மலையே
என் மீட்பரும் அவரே
என் கீதமும் அவரே
என்றும் என் கன்மலையே
இயேசு என் கன்மலையே
இன்னல் உலகிதிலே
அண்ணல் எனக்கவரே
என்றும் என் கன்மலையே
இயேசு என் கன்மலையே
துன்பப் பெருக்கினிலே
இன்பமெனக் கவரே
என்றும் என் கன்மலையே
இயேசு என் கன்மலையே
இனியான் அஞ்சிடேனே
தனிமை நான் ஆயினுமே
என்றும் என் கன்மலையே
இயேசு என் கன்மலையே
என் வீடதன் மீதிலே
என்றும் அசைவதில்லை
என்றும் என் கன்மலையே
நித்திய கன்மலையே
நீங்கிடா கன்மலையே
பிளவுண்ட கன்மலையே
இரட்சையின் கன்மலையே