Yesu En Patcham irupathal song lyrics

இயேசு என் பட்சம் இருப்பதால்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு என் பட்சம் இருப்பதால் கவலை பயமில்லை
எந்த காலத்திலும் எல்லா நேரத்திலும்
இந்த உலகினிலே என்னை காத்திடுவார்
எந்தன் வாழ்வதனில் பல நன்மைகளை
தந்து நிறைத்திடுவார் நான் மகிழ்ந்திடுவேன்
ஆயிரம் பார்வோன்கள் என்னை பின்தொடர்ந்து வந்தாலும்
ஆயிரம் சவுல்கள் என்னை எதிர்த்து நின்றாலும்
என் தேவன் கரத்திலிருந்து என்னை பிரிக்க முடியாது
ஆயிரம் சீமான்கள் என்னை நிந்தனை செய்தாலும்
ஆமாங்கள் எனக்கு துரோகம் செய்தாலும்
தேவன் அனுமதியின்றி தலைமுடி கூட விழாது