yesu ennotiruppathaal

இயேசு என்னோடிருப்பதால்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு என்னோடிருப்பதால்
எனக்கு பயமில்ல
என் கர்த்தர் என்னோடிருப்பதால்
கலக்கம் எனக்கில்ல
கலங்கல நான் கலங்கல
பயமில்ல எனக்கு பயமில்ல
கர்த்தரின் பாதத்தில் நித்தம் அமருவேன்
அன்பரின் மார்பினில் சாய்ந்து
மகிழுவேன்-துதிப்பேன் நான் துதிப்பேன்
மகிழுவேன் துதித்து மகிழுவேன்
இளமையிலே நான்இயேசுவைத் தேடுவேன்
உலக ஆசையை உதறித் தள்ளுவேன்
தள்ளுவேன் உதறித் தள்ளுவேன்
வாழுவேன் உமக்காய் வாழுவேன்
பரிசுத்த வாழ்க்கையை நாடி ஓடுவேன்
பிறருக்கு சாட்சியாய் வாழ்ந்து காட்டுவேன்
காட்டுவேன் வாழ்ந்து காட்டுவேன்
ஜீவிப்பேன் சாட்சியாய் ஜீவிப்பேன்
ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஆமென் ஹாலேலூயா