Yesu Namam solla solla

இயேசு நாமம் சொல்லச் சொல்ல

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Yesu Namam solla solla – இயேசு நாமம் சொல்லச் சொல்ல
இயேசு நாமம் சொல்லச் சொல்ல
எந்தன் உள்ளம் துள்ள துள்ள
இனிக்குதையா எந்தன் வாழ்க்கையே
அதில் இருக்குதையா உந்தன் வார்த்தையே
1.பிறவியிலே முடவன் நான் ஐயா
உம் சீஷரிடம் கேட்டேன் உதவியாம்
உம் நாமத்திலே என்னை தூக்கி எழுந்து நட என்று சொல்ல
எழுந்து நடந்தேன் எந்தன் இயேசையா-இயேசு நாமம்
2.வெறுமையான என் படகையாம்
அதில் அமர்ந்திருந்தார் எந்தன் இயேசையா
வார்த்தை ஒன்று சொன்னாரே வலையை போடு என்றாரே
வலை கிழியத்தக்க மீன் கிடைத்ததையா-இயேசு நாமம்
3.நிமிர முடியா கூனி நான் ஐயா என்னை
ஆலயத்தில் கண்டார் இயேசையா
சாத்தானாலே கட்டப்பட்டு முடக்கப்பட்ட
என் வாழ்வை நிமிர செய்தார் எந்தன் இயேசையா-இயேசு நாமம்