yesu thaevanaith thuthiththiduvom

இயேசு தேவனைத் துதித்திடுவோம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Yesu devanai Thuthithiduvom – இயேசு தேவனைத் துதித்திடுவோம்
இயேசு தேவனைத் துதித்திடுவோம்
இயேசு ராஜனை வாழ்த்திடுவோம்
இதயம் பொங்க நன்றியுடனே
போற்றி உயர்த்தி பணிந்திடுவோம்
1.வார்த்தை வடிவாய் வந்தவரை
வாதை பிணியைத் தீர்த்தவரை
கண்ணின் மனிபோல் காத்த தயவை
கருணை உருவைத் துதித்திடுவோம் – இயேசு தேவனை
2.அடிமை ரூபம் எடுத்தவரை
அகிலம் பணிந்திட செய்தவரை
உயர்ந்த நாமம் பெற்று விளங்கும்
உன்னதர் அவரைப் போற்றிடுவோம் – இயேசு தேவனை
3.இருளை நீக்கும் மாஜோதியாய்
உலகில் வந்த அருள் வடிவை
ஜீவ ஒளியாய் திகழும் அவரை
கிருபை உருவைத் துதித்திடுவோம் – இயேசு தேவனை
4.பாவ சாப மரணமதை
ஜெயித்து வென்று எழுந்தவரை
மகிமை சூழ திரும்ப வந்திடும்
வேந்தன் அவரைத் துதித்திடுவோம் – இயேசு தேவனை