Yesu Thotrathillai

இயேசு தோற்றதில்லை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு தோற்றதில்லை
நம் இயேசு தோற்றதில்லை
வானம் தோன்றிய நாள் முதல்
இயேசு தோற்றதில்லை
இவ்வுலகம் பிறந்த நாள் முதல்
இயேசு தோற்றதில்லை
நாம் வாழும் இந்நாளிலும்
இயேசு தோற்றதில்லை
இனிவரும் நாட்கள் ஒவ்வொன்றிலும்
இயேசு தோற்பதில்லை
உலகச்சரித்திரம் புரட்டிப்பார்த்தேன்
இயேசு தோற்றதில்லை
இவ்வுலகமும் அவரைப் புரட்டிப்பார்த்தது
இயேசு தோற்றதில்லை
சிலுவை மரணமும் மோதிப்பார்த்தது
இயேசு தோற்றதில்லை
உயிர்த்தார் சாவை வென்றெழுந்தார்
இயேசு தோற்பதில்லை
இயேசு தோற்றதில்லை பாடல் வரிகள், Yesu Thotrathillai lyrics