yesu yean piranthaar ezhai kolamathaai

இயேசு ஏன் பிறந்தார் ஏழை கோலமதாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு ஏன் பிறந்தார் ஏழை கோலமதாய்
பாவியை மீட்கட் பாசமாய் பாரினில் வந்தாரே
உன்னதத்தில் மா மகிமை
இந்த பூமியிலே சமாதானம்
மனிதர் பேரிலே பிரியமும்
இன்றும் என்றும் உண்டாவதாக
1. பாவ சேற்றினிலே
பாலும் மண்ணுலகினிலே – மாய
இன்பத்தித்லே மனிதன் புரள்வது ஏன்
தேவன் நம்மேல் கொண்ட அன்பால்
தாரணி மீதில் நம்மை தேடி வந்தந்
இயேசுவிடம் தஞ்சமடைவாய்
2. சோதனைக்காரன் சாத்தான்
ஓர் சங்காரன் அவனை
அழித்திடவே இயேசு அவனியில் பிறந்தார்
சோதனை நிறைந்தந் வாழ்வில்
சோர்ந்திடும் மாந்தா – பொல்லா
பிசாசை வென்ற இயேசு பாதம் நம்பி வா
3. இம்மை வாழ்வினிலே
இம்மானுவேல் துணையே – இன்னல்
மத்தியிலே இவர் நம்முடன் உண்டே
காரிருளில் துன்ப வாழ்வில்
கர்த்தர் நம் ஜோதி ஒளி வீசும் – ஜீவ
பாதை செல்வோம் இயேசுவின் பின்னே