Yesuvae Enthan Jeevanae Lyrics

இயேசுவே எந்தன் ஜீவனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவே எந்தன் ஜீவனே
இயேசுவே எந்தன் ராஜனே
இயேசுவே எந்தன் தெய்வமே
எனது மணவாளனே
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை உயர்த்தியே
ஸ்தோத்திரம் செலுத்தியே ஆராதிப்பேன்
1.அவருக்குள் ஜீவன் இருந்ததே
மனிதர்க்கு வெளிச்சமானதே
இருளில் பிரகாசமானதே
அவரே எந்தன் ஜீவனே- உம்மை ஆராதிப்பேன்
2.தேவ ராஜ்யத்தின் ராஜனே
உங்க ராஜ்ஜியத்தில் என்னை வைத்தீரே
ராஜ்ஜிய நன்மை தருவீரே
அவரே எந்தன் ராஜனே- உம்மை ஆராதிப்பேன்
3.நித்திய மணவாளன் இயேசுவே
மத்திய வானில் வருவாரே
அவரோடென்னை சேர்ப்பாரே
அவர் தான் என் மணவாளனே- உம்மை ஆராதிப்பேன்