Yesuvae Ummai polaga

இயேசுவே உம்மைப் போலாக

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Yesuvae Ummai polaga – இயேசுவே உம்மைப்போலாக
இயேசுவே உம்மைப்போலாக
வாஞ்சிக்குதே என்னுள்ளம்
என் ஆவி ஆத்மா சரீரம்
முற்றும் படைத்து விட்டேன்
என்னை ஏற்றுக்கொள்ளும் ஐயனே
1.பாவமறியாது பாவமே செய்யாது
பாரினில் ஜீவித்தீரே
பரிசுத்தர் உம்மைப் போல் ஜீவிக்கவே
பெலமதை தாருமையா – உந்தன்
2.உபத்திரவம் உண்டு உலகினில் என்று
உலகத்தை வென்றேனென்றீர்
உம்மைப்போல் உலகினை ஜெயத்திடவே
பெலமதை தாருமையா – உந்தன்
3.சிலுவை சுமந்தென்றும் என் பின் வராதவன்
அல்ல என் சீஷன் என்றீர்
எந்தன் சிலுவையை நான் சுமக்க
பெலமதைத் தாருமையா – உந்தன்
4.தலைசாய்க்க தலமில்லை
தரணியில் உறவில்லை
நிலையில்லா பூவில் என்றீர்
நானும் உம்மைப் போல தியாகம் செய்ய
பெலமதைத் தாருமையா – உந்தன்
5.சீயோன் மலையதில் சிறந்தே இலங்கிடும்
தேவாட்டுக்குட்டி நீரே
சீயோனில் உம்முடன் நானிருக்க
உம்மைப் போல் மாற்றும் ஐயா – என்னை