1.yesuve azhaikkirar

யேசுவே அழைக்கிறார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.யேசுவே அழைக்கிறார்
வா, – வா, – பிள்ளையே;
ஏழை உன்னை ரட்சிப்பார்,
வா, – வா, – பிள்ளையே;
தேவன் மனுவாகினார்,
உன்னைப் போல பிறந்தார்,
தயவாய் அழைக்கிறார்;
வா, – வா, – பிள்ளையே.
2.சிலுவை சுமந்தவர்
வா, – வா, – பிள்ளையே;
உன்னை மீட்ட ரட்சகர்,
வா, – வா, – பிள்ளையே;
திவ்ய ரத்தம் சிந்தினார்,
அதால் உன்னை ரட்சிப்பார்,
திருக்கையில் ஏந்துவார்;
வா, – வா, – பிள்ளையே.
3.மோட்ச வீட்டில் ஏற்றுவார்,
வா, – வா, – பிள்ளையே;
பொற் கிரீடம் சூட்டுவார்,
வா, – வா, – பிள்ளையே;
துன்பம், துக்கம் அடையாய்,
பாவம் நீங்கிக் களிப்பாய்
யேசுவோடும் வாழுவாய்;
வா, – வா, – பிள்ளையே.
இயேசுவே அழைக்கிறார் பாடல் வரிகள், Yesuvae Alaikiraar lyrics