yesuve neer nallavar elshadaai

இயேசுவே நீர் நல்லவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவே நீர் நல்லவரே
வடு ஏல்ஷடாய் சர்வ வல்லவரே-2
நீரே போதும் வேறொன்றும் வேண்டாம்
என் வாழ்வில் என்றென்றுமே -2
ஆராதனை ஆராதனை
ஏல்ஷடாய் உமக்கே ஆராதனை-2
1. யேகோவாயீரே நீரே
எல்லாமே பார்த்துக் கொள்வீர் -2
எந்தன் பரிகாரி நீர் போதுமே
என் வாழ்வில் என்றென்றுமே-2
2. யேகோவா ராஃபா நீரே
எந்நாளுமே சுகம் தருபவரே
எந்தன் வைத்தியர் நீர் போதுமே
என் வாழ்வில் என்றென்றுமே
3. யேகோவா ஷாலோம் நீரே
மா என்றென்றும் நிம்மதி தருபவரே
எந்தன் சமாதானம் நீர் போதுமே
என் வாழ்வில் என்றென்றுமே