yesuvin anbai ninaithidu

இயேசுவின் அன்பை நினைத்திடுவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவின் அன்பை நினைத்திடுவேன்
இறுதிவரை நான் பாடிடுவேன் -2
தூயரின் அன்பை மறவேனே
துதித்து மகிழ்ந்து களித்திடுவேன்-2
1. தாயினும் மேலாய் நினைத்த அன்பு
தாங்கியே என்னை நிறுத்தும் அன்பு −2
தளராது என்னை அணைக்கும் அன்பு
தற்பரன் என்னில் பொழிந்த அன்பு -2
2. ஜீவனை எனக்காய் கொடுத்த அன்பு
தாழ்வினில் என்னை நினைத்த அன்பு
மகனா(ளா)ய் என்னை மாற்றிய அன்பு
புனிதர் இயேசுவின் அழியா அன்பு
3. உலகத்திலிருந்து பிரித்த அன்பு
சேற்றினிலிருந்து தூக்கிய அன்பு
உன்னத வாழ்வை அளித்த அன்பு
உத்தமனாய் என்னை மாற்றிய அன்பு
4. சத்திய தேவனின் தனிப்பெரும் அன்பு
சுத்தராய் வாழ்ந்திட சேர்த்திட அன்பு
சிலுவையிலே தம்மை கொடுத்த அன்பு
சித்தங்கொண்டு எம்மை மீட்டிடும் அன்பு
5. தவறிய என்னை தேடிய அன்பு
தயாளராய் என்னை தாங்கிய அன்பு
மறவாது என்னை நோக்கிய அன்பு
மகிபன் இயேசுவின் மாறா அன்பு